திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய பெண்ணுக்கு கொலை மிரட்டல்


திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய பெண்ணுக்கு கொலை மிரட்டல்
x

திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

திருவண்ணாமலை

போளூர்

சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் 33 வயது பெண்ணும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபரும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த வாலிபர் பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி தனிமையில் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதில் அந்த பெண் கர்ப்பணியானார்.

இதையடுத்து வாலிபரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி உள்ளார். பின்னர் வாலிபர் கொடுத்த மாத்திரைகளை சாப்பிட்டு கர்ப்பத்தை கலைத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மீண்டும் அந்த பெண் வாலிபரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தினார்.

இதில் ஆத்திரமடைந்த வாலிபர் திருமணம் செய்து கொள்ள முடியாது என்ற ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து போளூர் அனைத்து மகளிர் போலீசீல் பெண் புகார் அளித்தார். அதன்பேரில் வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story