விவசாயிக்கு கொலை மிரட்டல்; 4 பேர் மீது வழக்கு


விவசாயிக்கு கொலை மிரட்டல்;  4 பேர் மீது வழக்கு
x

மானூர் அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

திருநெல்வேலி

மானூர்:

மானூர் அருகே உள்ள அழகியபாண்டியபுரத்தைச் சேர்ந்தவர் கணபதி, (வயது 45). விவசாயி. இவருக்கு சொந்தமாக கானார்பட்டியில் விவசாய நிலம் உள்ளது. இதனை அழகியபாண்டியபுரத்தை சேர்ந்த தவமணி மனைவி கன்னி மரியாள், தூத்துக்குடி மாவட்டம் கோனார்குளத்தைச் சேர்ந்த ஆனந்தகுமார் மனைவி சாந்தகுமாரி, ஆலங்குளம் அருகே உள்ள காவலாகுறிச்சியை சேர்ந்த பத்ரோஸ் மனைவி அந்தோணியம்மாள் மற்றும் தெற்கு வாகைக்குளத்தைச் சேர்ந்த பெரிய யோசேப்பு மகன் சீனி ஆகியோர் சேர்ந்து கணபதிக்கு சொந்தமான நிலத்தை, போலிப் பத்திரம் மூலம் கிரையம் செய்துள்ளனர்.

இந்நிலையில் கணபதி நீதிமன்றம் மற்றும் மாவட்ட பதிவாளர் அலுவலகம் மூலம் அதனை ரத்து செய்துள்ளார். தொடர்ந்து அந்த நிலத்தில் கணபதி உளுந்து மற்றும் பருத்தி பயிரிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கன்னிமரியாள் உள்ளிட்டோர் அந்த பயிர்களை சீனி என்பவரின் டிராக்டர் மூலம் உழுது சேதம் செய்துள்ளனர். அதனை தட்டிக் கேட்ட கணபதியை 4 பேரும் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் 4 பேர் மீது மானூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காளியப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story