விற்பனையாளருக்கு கொலை மிரட்டல்; கேமரா உடைப்பு


விற்பனையாளருக்கு கொலை மிரட்டல்; கேமரா உடைப்பு
x

விற்பனையாளருக்கு கொலை மிரட்டல்; கேமரா உடைப்பு

நாகப்பட்டினம்

வேதாரண்யத்தில் மதுக்கடையில் ஏற்பட்ட தகராறில் விற்பனையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்து கேமராவை உடைத்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கொலைமிரட்டல்

வேதாரண்யம் மேலத்தெரு திருத்துறைப்பூண்டி சாலையில் அரசு மதுக்கடை உள்ளது. இதில் முருகசுந்தரம் (வயது45) என்பவர் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 6-ந்தேதி இவர் இரவு பணியில் இருந்தார். அப்போது வேதாரண்யம் நகர் பகுதியை சேர்ந்த பிரகாஷ், வீரபாண்டியன் ஆகிய இருவரும் கடைக்கு வந்து கடனுக்கு மதுபானம் கேட்டுள்ளனர். அப்போது முருகசுந்தரம் கடனுக்கு தரமுடியாது என கூறினார். இதையடுத்து பணம் கொடுத்து மதுபாட்டில்கள் வாங்கினர். அந்த மதுபாட்டில்களை கடை வாசலிலேயே உடைத்து, விற்பனையாளரை தரக்குறைவாக பேசி அவருக்கு கொைல மிரட்டல் விடுத்தனர்.

வழக்கு

மேலும் அங்குள்ள டியூப் லைட் மற்றும் கேமராவை உடைத்து சேதப்படுத்தினர். இதுகுறித்து முருகசுந்தரம் கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம், 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகிறார்.

1 More update

Next Story