மைதானத்தில் தேங்கி கிடக்கும் குப்பைகள்


மைதானத்தில் தேங்கி கிடக்கும் குப்பைகள்
x

விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறும் மைதானத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும்

கோயம்புத்தூர்

கோவை

கோவை நேரு உள்விளையாட்டு மைதானம் எதிரே மாநகராட் சியின் கட்டுப்பாட்டில் கூடைப்பந்து மைதானம் உள்ளது. இங்கு மாவட்ட, மாநில, அகில இந்திய அளவில் கூடைப்பந்து போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த மைதானம் அருகே கடந்த ஒரு வாரமாக குப்பைகள் குவிந்து கிடக்கின்றன.

அவை அகற்றப்படாததால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பயிற்சி பெறும் விளையாட்டு வீரர்கள் அவதிப்படுகின்றனர். இது குறித்து மைதானத்தில் பயிற்சி பெற வரும் வீரர், வீராங்கனைகள் கூறியதாவது:-

கூடைப்பந்து மைதானத்தில் கடந்த வாரம் அகில இந்திய அளவிலான போட்டி நடைபெற்றது. இதில் கேரளா, இந்திய விமானப்படை, கடற்படை உள்பட பல்வேறு அணிகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினர்.

போட்டி முடிந்ததும் இரவில் வீரர்களுக்கு உணவு வழங்கப்பட் டது. அதை சாப்பிட்ட பிறகு பாக்குமட்டைதட்டு மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அங்கேயே போட்டு விட்டு சென்றனர். அவை அகற்றப்படாமல் தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் வீசுகி றது.

நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story