517 ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய முடிவு - என்.எல்.சி. அறிவிப்பு


517 ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய முடிவு - என்.எல்.சி. அறிவிப்பு
x

517 பேரை மூப்பு அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய முடிவு செய்துள்ளதாக என்.எல்.சி. நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடலூர்,

நெய்வேலி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிற்சங்க தொழிலாளர்கள், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்தனர். இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.

இந்த நிலையில் மொத்தம் உள்ள 6,480 ஒப்பந்த தொழிலாளர்களில் 517 பேரை மூப்பு அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய முடிவு செய்துள்ளதாக என்.எல்.சி. நிர்வாகம் அறிவித்துள்ளது. இதில் மாறுபட்ட கருத்து இருந்தால் 7 நாட்களுக்குள் நிர்வாகத்திடம் தெரிவிக்கலாம் என்று என்.எல்.சி. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story