கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை பெற பயனாளிகளுக்கு பிரத்யேக ஏ.டி.எம். கார்டு..!


கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை பெற பயனாளிகளுக்கு பிரத்யேக ஏ.டி.எம். கார்டு..!
x
தினத்தந்தி 14 Sept 2023 1:15 PM IST (Updated: 14 Sept 2023 1:58 PM IST)
t-max-icont-min-icon

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெறும் பெண்களுக்கு பிரத்யேக ஏ.டி.எம். கார்டு வழங்கப்படுகிறது.

சென்னை,

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் அண்ணா பிறந்தநாளான நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி வைக்கப்படுகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரம் சென்று இந்த திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். நாளையே ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்து விடும்.

இந்த திட்டத்தில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்ப தலைவிகள் மாதந்தோறும் ரூ.1000 பெறப்போகிறார்கள். மொத்தம் 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் வந்திருந்த நிலையில் கிட்டத்தட்ட 57 லட்சம் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெறும் பெண்களுக்கு பிரத்யேக ஏ.டி.எம். கார்டு வழங்கப்படுகிறது. காஞ்சிபுரத்தில் நாளை ஏ.டி.எம். கார்டுகளை வழங்கி இத்திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். பயனாளிகளுக்கு நாளை வங்கிக்கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்படுகிறது. ஏ.டி.எம். கார்டில் பெயர், மாதம், வருடம் உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்றுள்ளது.

1 More update

Next Story