நாய்கள் கடித்ததில் மான் சாவு


நாய்கள் கடித்ததில் மான் சாவு
x

பொன்னரி அருகே நாய்கள் கடித்ததில் மான் இறந்தது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை அருகே உள்ள ஏலகிரி மலை காப்புக் காட்டில். மான், மயில், கரடி, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் உள்ளன. அவ்வப்போது மான், மயில் உள்ளிட்ட உயிரினங்கள் மலை அடிவாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு தண்ணீர் தேடி வருகின்றன. அப்போது நாய்கள் கடித்து மான்கள் இறக்கும் சம்பவம் நடந்து வருகிறது.

இந்தநிலையில் பொன்னேரி அருகே மலை அடிவாரத்தில் சுமார் மூன்று வயது மதிக்கத்தக்க ஆண் மான் ஒன்று தண்ணீர் தேடி ஊருக்குள் நுழைந்தது. அப்போது அங்கிருந்த நாய்கள் அதனை விரட்டி கடித்ததில் மான் பரிதாபமாக உயிரிழந்தது. இதுபற்றி தகவலறிந்த திருப்பத்தூர் வனத்துறையினர் அங்கு சென்று மானின் உடலை பிரேத பரிசோதனை செய்து அதே இடத்தில் புதைத்தனர்.

1 More update

Related Tags :
Next Story