கண்மாயில் தவறி விழுந்து மான் சாவு


கண்மாயில் தவறி விழுந்து மான் சாவு
x

வெள்ளையபுரம் அருகே கண்மாயில் தவறி விழுந்து மான் இறந்தது.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானை தாலுகா வெள்ளையபுரம் அருகே உள்ள பதனக்குடி, சிறுகம்பையூர் கண்மாய் பகுதிகளில் அடர்ந்த காடுகள் இருப்பதால் இப்பகுதியில் ஏராளமான மான்கள் சுற்றி திரிகின்றன. நேற்று பதனக்குடி கண்மாயில் தண்ணீர் குடிப்பதற்காக சென்ற மான் ஒன்று தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தது. இதனை அறிந்த கிராம மக்கள் வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தாசில்தார் செந்தில் முருகன் வனத்துறை அதிகாரிகளுக்கு அளித்த தகவலின் பெயரில் வனத்துறை அலுவலர்கள் உயிரிழந்த மானை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


Related Tags :
Next Story