ஏற்காட்டில் இறந்து கிடந்த மான்


ஏற்காட்டில் இறந்து கிடந்த மான்
x
சேலம்

ஏற்காடு:-

ஏற்காடு பெட் பகுதியில் உள்ள பூசாரி தோட்டத்தில் நேற்று மாலை ஆண் மான் ஒன்று கழுத்தில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்தது. தகவல் அறிந்த வனவர் சக்திவேல் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்து கிடந்த மானின் உடலை மீட்டு ஏற்காடு சூழல் சுற்றுலா பூங்காவுக்கு கொண்டு வந்து பிரேத பரிசோதனைக்காக வைத்துள்ளனர்.

இதுதொடர்பாக ஏற்காடு ரேஞ்சர் பழனிவேல் கூறுகையில், இறந்த மானை ஏதோ விலங்கு கடித்த அடையாளம் உள்ளது. அது நாயாக இருக்கலாம் என நினைக்கிறோம். இருந்தாலும் மானை கடித்த விலங்கு எது என்பது பிரேத பரிசோதனைக்கு பிறகுதான் தெரிய வரும் என்றார்.

1 More update

Next Story