கோத்தகிரி பேரூராட்சியில் முட்புதர்களை வெட்டி அகற்றும் பணி


கோத்தகிரி பேரூராட்சியில் முட்புதர்களை வெட்டி அகற்றும் பணி
x

கோத்தகிரி பேரூராட்சியில் முட்புதர்களை வெட்டி அகற்றும் பணி

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட கேம்ப்லைன் பகுதியில் பேரூராட்சி மூலம் துப்புரவு பணியாளர்களுக்கு 13 குடியிருப்புக்கள் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து இப்பகுதியில் மேலும் பல வீடுகளை துப்புரவு பணியாளர்கள் கட்டியுள்ள நிலையில் தற்போது அங்கு மொத்தம் 40 குடியிருப்புக்கள் அமைந்துள்ளன. இந்த பகுதியில் முறையாக தூய்மைப் பணி செய்வதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வந்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று அப்பகுதியில் பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித், பேரூராட்சி உறுப்பினர் ஆகியோர் மேற்பார்வையில் முழு தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் கழிப்பிடங்களை தூய்மை செய்யும் பணி, முட்புதர்களை வெட்டி அகற்றும் பணி, மழை நீர் மற்றும் கழிவு நீர் கால்வாய் அடைப்புக்களை அகற்றும் பணி, நடைபபதைகளை தூய்மை செய்யும் பணி உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.


Next Story