பிளஸ்-2 தேர்வு முடிவை அறிவிப்பதில் தாமதம்


பிளஸ்-2 தேர்வு முடிவை அறிவிப்பதில் தாமதம்
x
தினத்தந்தி 9 May 2023 12:15 AM IST (Updated: 9 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவை அறிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டதால் மாணவர்கள் அவதி அடைந்தனர்.

கடலூர்

கடலூர்

பதற்றம்

தமிழகம் முழுவதும் நேற்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் காலை 9.30 மணிக்கு இணைய தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கான இணைய தள முகவரியும் கொடுக்கப்பட்டது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஆனால் காலை 10 மணியை தாண்டியும் தேர்வு முடிவு வெளியாகவில்லை. இதனால் மாணவர்கள் அவதி அடைந்தனர். மேலும் அவர்கள் ஒரு வித பதற்றத்துடன் காணப்பட்டனர். அதன்பிறகு காலை 10.10 மணிக்கு தாமதமாக தான் இணைய தளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதை மாணவர்கள் தங்களின் செல்போன் மற்றும் இணைய தளங்களில் சென்று தங்களுடைய தேர்வு எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை அறிந்து கொண்டனர்.

மகிழ்ச்சி

சிலர் தாங்கள் படித்த பள்ளிகளுக்கு வந்து, ஆசிரியர்களிடம் கேட்டு தேர்வு முடிவுகளை தெரிந்து கொண்டனர். தேர்ச்சி பெற்ற மாணவிகள் உற்சாகத்துடன் காணப்பட்டனர். அவர்கள் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், நண்பர்கள், உறவினர்களுக்கு இனிப்பு கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் சிலர் வெற்றியை குறிக்கும் வகையில் வலது கையை உயரே தூக்கி சைகை காண்பித்தும், உற்சாகத்துடன் துள்ளிக்குதித்தும் மகிழ்ச்சியை வெளிப்படு்த்தினர்.


Next Story