"புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்வது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது" - ஐகோர்ட் கருத்து


புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்வது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது - ஐகோர்ட் கருத்து
x

புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்வது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக அரசின் போக்குவரத்துத்துறையில் பணியாற்றிய ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மோகன்ராஜ், கடந்த 2016-ம் ஆண்டு பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ராவிடம் 10 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். கடனை திருப்பி செலுத்தும் வகையில் மோகன்ராஜ் கொடுத்த காசோலை கொடுத்ததாகவும், ஆனால் அவர் அளித்த வங்கி கணக்கில் பணம் இல்லாததால் காசோலை திருப்பி வந்ததாகவும் அப்போதைய தலைமை செயலாளரிடம் பைனான்சியர் போத்ரா புகார் அளித்தார்.

இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் கடந்த 2016-ம் ஆண்டு போத்ரா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, புகார் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டார். மேலும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அரசு அதிகாரிகள் காலதாமதம் செய்வது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.


Next Story