டெல்லி போலீசில் ஆபரேட்டர் பணிகளுக்கான தேர்வு: 27, 28-ந் தேதிகளில் நடக்கிறது


டெல்லி போலீசில் ஆபரேட்டர் பணிகளுக்கான தேர்வு: 27, 28-ந் தேதிகளில் நடக்கிறது
x

கோப்புப்படம்

டெல்லி போலீசில் ஆபரேட்டர் பணிகளுக்கான தேர்வு வரும் 27, 28-ந் தேதிகளில் தமிழகத்தில் 7 இடங்களில் நடைபெறுகிறது.

சென்னை,

டெல்லி காவல்துறையில் தலைமைக் காவலர் அந்தஸ்தில் உள்ள உதவி வயர்லஸ் ஆபரேட்டர், டெலிபிரிண்டர் ஆபரேட்டர் பணிக்கான தேர்வு, கணினி அடிப்படையில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகிறது. இந்த தேர்வு வருகிற 27, 28-ந் தேதிகளில் நடக்கிறது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை, வேலூர் ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தென்மண்டலத்தில் 18,179 பேர் இந்தத் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதற்கான மின்னணு அனுமதி சான்றிதழை (ஹால்டிக்கெட்) மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் தேர்வு தொடங்குவதற்கு 4 நாட்கள் முன்பிருந்து விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மின்னணு அனுமதி சான்றிதழ் மற்றும் அசல் தகுதி சான்றை விண்ணப்பதாரர்கள் தேர்வின்போது கட்டாயம் எடுத்து வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044-2825 1139 என்ற தொலைபேசியிலோ அல்லது 94451-95946 என்ற செல்போனிலோ தொடர்பு கொள்ளலாம்.

மேற்கண்ட தகவல் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தென்மண்டல இயக்குநர் நாகராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


Next Story