காலமுறை ஊதியம் வழங்க கோரிக்கை


காலமுறை ஊதியம் வழங்க கோரிக்கை
x

காலமுறை ஊதியம் வழங்க மருத்துவ காப்பீட்டு திட்ட பணியாளர் நலச்சங்கம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கரூர்

ஊதிய குறைப்புக்கு வழிவகுக்கும் அரசாணை 219-ஐ ரத்து செய்து ஊதிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். நியாயமான அடிப்படையில் ஊதிய உயர்வை நிர்ணயிக்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். ஹவுஸ்கீப்பர் பணியாளர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவ காப்பீட்டு திட்ட பணியாளர் நலச்சங்கத்தினர் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர்.


Next Story