தூய்மை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க கோரிக்கை


தூய்மை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 8 Jan 2023 9:01 PM GMT (Updated: 9 Jan 2023 10:24 AM GMT)

தூய்மை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி

பொன்மலைப்பட்டி:

தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி எல்லை விரிவாக்க ஓ.எச்.டி. குடிநீர் பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் இதர தொகுப்பு ஊதியம் மற்றும் தினக்கூலி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம், அரியமங்கலம் அருகே உள்ள காட்டூரில் நடந்தது. கூட்டத்திற்கு காஞ்சீபுரம் நிர்வாகி சம்பத் தலைமை தாங்கினார். புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகி சத்தியமூர்த்தி, காஞ்சீபுரம் மாநகராட்சி நிர்வாகி கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அரசாணைகளின் படி நகராட்சி, மாநகராட்சிகளோடு எல்லை விரிவாக்கத்தின் போது ஈர்த்துக் கொள்ளப்பட்டு 2011-ம் ஆண்டு முதல் 11 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் ஓ.எச்.டி. குடிநீர் பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும். மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் பணிகளை வெளி முகமை மூலம் மேற்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ள அரசாணை 152-ஐ ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மதுரை, திண்டுக்கல், வேலூர் மாநகராட்சி நிர்வாகிகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த நகராட்சி மற்றும் மாநகராட்சியில் தொகுப்பூதியம் மற்றும் தினக்கூலி அடிப்படையில் வேலை பார்க்கும் ஊழியர்கள், திருச்சி மாநகராட்சியில் பணிபுரியும் நிர்வாகிகள் வின்சென்ட், அண்ணாதுரை, ரமேஷ், பொன்னம்மாள் என்ற பொன்னி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story