சேதமடைந்த போலீஸ் குடியிருப்பை சீரமைக்க கோரிக்கை


சேதமடைந்த போலீஸ் குடியிருப்பை சீரமைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 23 Aug 2023 7:45 PM GMT (Updated: 23 Aug 2023 7:45 PM GMT)

விருதுநகரில் போலீசாருக்கான குடியிருப்பு வளாகம் முறையாக பராமரிக்கப்படாததால் வீடுகள் அனைத்தும் சேதமடைந்து உள்ளது. இதனை புனரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்

விருதுநகர்

விருதுநகரில் போலீசாருக்கான குடியிருப்பு வளாகம் முறையாக பராமரிக்கப்படாததால் வீடுகள் அனைத்தும் சேதமடைந்து உள்ளது. இதனை புனரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

போலீஸ் குடியிருப்பு

விருதுநகர் மாவட்டம் கடந்த 1985-ம் ஆண்டு உருவான நிலையில் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் அருகே 1992-ம் ஆண்டு ஆயுதப்படை போலீஸ் வளாகம் அருகில் போலீசார் குடியிருப்பு கட்டப்பட்டது. இதில் 600-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள நிலையில் அதிகாரிகளுக்கென தனியாக குடியிருப்பு கட்டப்பட்டது.

இந்த குடியிருப்புகள் முறையாக பராமரிக்கப்படாத நிலையில் தற்போது இடிந்து விழும் நிலையில் சேதமடைந்து உள்ளன. இதற்காக அரசு பராமரிப்பு நிதி அனுப்பியும் அது முறையாக செலவிடப்படாததால் இந்த வளாகம் இந்த அளவிற்கு சிதிலமடைந்து விட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வாடகை வீடுகளில்

அரசு போலீசாருக்கு தனியாக குடியிருப்பு கட்டிக் கொடுத்ததின் நோக்கமே அவர்களின் குடும்பம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகதான். அவ்வாறு குடும்பம் பாதுகாப்பாக இருந்தால் தான் அவர்கள் பணியில் உரிய கவனம் செலுத்த இயலும் என்ற அடிப்படையில் போலீஸ் குடியிருப்புகள் கட்டப்பட்டன.

ஆனால் தற்போது விருதுநகர் போலீஸ் குடியிருப்பு சேதமடைந்து இருப்பதால் போலீசார் அங்கிருந்து வெளியேறி வாடகை வீடுகளில் குடியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் இன்ஸ்பெக்டர் குடியிருப்பில் மட்டும் ஒரு சிலர் குடியிருக்கும் நிலையில் மற்ற குடியிருப்பில் போலீசார் இல்லாத நிலை உள்ளது. மேலும் போலீஸ் குடியிருப்பு வளாகத்திற்கு செல்லும் சாலையும் மிகவும் சேதம் அடைந்து வாகன போக்குவரத்துக்கு தகுதி இல்லாத நிலையில் உள்ளது. குடியிருப்பு வளாகம் முழுவதும் புதர்மண்டியும் மின்கம்பம் சேதம் அடைந்தும் உள்ளது.

கோரிக்கை

எனவே மாவட்ட போலீஸ் நிர்வாகம் இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நிதி ஒதுக்கீடு பெற்று இந்த போலீஸ் குடியிருப்புவளாகத்தை புனரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறுபுனரமைக்கப்பட்ட போலீஸ் குடியிருப்பில் போலீசாரை குடியமர்த்தினால் தான் அவர்களிடம் இருந்து மேம்பட்ட சேவையை எதிர்பார்க்க முடியும்.


Next Story