சிறு, குறு நிறுவனங்களுக்கு வைப்புநிதி, தொழிலாளர் காப்பீடு எளிமையாக்க கோரிக்கை

சிறு, குறு நிறுவனங்களுக்கு வைப்புநிதி, தொழிலாளர் காப்பீடு எளிமையாக்க கோரிக்கை
x

சிறு, குறு நிறுவனங்களுக்கு வைப்புநிதி, தொழிலாளர் காப்பீடு எளிமையாக்கப்பட வேண்டும் என கலெக்டர் தலைமையில் நடந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ராணிப்பேட்டை

சிறு, குறு நிறுவனங்களுக்கு வைப்புநிதி, தொழிலாளர் காப்பீடு எளிமையாக்கப்பட வேண்டும் என கலெக்டர் தலைமையில் நடந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், இந்திய தொழில்துறை கூட்டமைப்பு சார்பில் ராணிப்பேட்டை மாவட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுடனான சிறப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தெரிவித்த கோரிக்கைகள் விவரம்:-

சிறு, குறு நிறுவனங்களுக்கு தனி சலுகை வழங்க வேண்டும். ஆர்டரின் பேரில் வேலை செய்யும் நிறுவனங்களுக்கு சிறப்பு வங்கி கடன்கள் வழங்க வேண்டும்.

சிறு, குறு நிறுவனங்களுக்கு தொழிலாளர் வருங்கால வைப்புநிதி, மருத்துவ காப்பீடு நடைமுறையை எளிமையாக்க வேண்டும் என்பது உள்பட சிறு, குறு நிறுவனங்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

நடவடிக்கை

இக்கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் வளர்மதி தெரிவித்தார்.

கூட்டத்தில் சென்னை மண்டல தலைவர் உன்னிகிருஷ்ணன், பெல் நிறுவன பொது மேலாளர் மணிமாலா, மாவட்ட தொழில் மைய மேலாளர் ஆனந்தன். முன்னோடி வங்கி மேலாளர் ஸ்ரீராம்ஜி குமார் மற்றும் தொழில் நிறுவனத்தினர் கலந்துகொண்டனர்.

Next Story