கமுதியில் டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை


கமுதியில் டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை
x
தினத்தந்தி 30 July 2023 12:15 AM IST (Updated: 30 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கமுதியில் டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை வைக்கப்பட்டது.

ராமநாதபுரம்

கமுதி,

கமுதி நகர் மக்கள் நலக்குழு சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்ட கலெக்டர், மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- கமுதி பஸ் நிலையத்திலிருந்து மருதுபாண்டி சிலை வழியாகத்தான் பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகள் செல்லும் நிலை உள்ளது. பொதுமக்களும் பல்வேறு பொருட்கள் வாங்க இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும். மருது பாண்டியர் சிலையை ஒட்டி வங்கிகள், உணவகங்கள், கோவில்கள் உள்ளன. இந்நிலையில் முக்கிய சாலையில் இந்த டாஸ்மாக் கடை உள்ளதால் பொதுமக்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் இடையூறாக உள்ளது. மேலும் மதுபோதையில் அடிக்கடி சண்டை நடப்பதால் மாணவ, மாணவிகள் அச்சம் அடைகின்றனர். எனவே, மருதுபாண்டி சிலை அருகே உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story