திருவொற்றியூரில் சாலையை ஆக்கிரமித்து கட்டி இருந்த சுற்றுச்சுவர் இடித்து அகற்றம்; மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை


திருவொற்றியூரில் சாலையை ஆக்கிரமித்து கட்டி இருந்த சுற்றுச்சுவர் இடித்து அகற்றம்; மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
x

திருவொற்றியூரில் சாலையை ஆக்கிரமித்து கட்டி இருந்த சுற்றுச்சுவர் இடித்து அகற்றப்பட்டது.

சென்னை

சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் 7-வது வார்டுக்கு உட்பட்ட பாலகிருஷ்ணா நகர் பகுதியில் தனியார் கட்டுமான நிறுவனம் மாநகராட்சிக்கு கொடுத்த நிலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்காமல் அதில் சுற்றுச்சுவரை கட்டி ஆக்கிரமிப்பு செய்திருந்தது. இதனால் அந்த பகுதியில் சாலை போக்குவரத்துக்கு சிரமம் ஏற்பட்டது. அந்த இடத்தை மீட்டு அங்கு சாலை அமைக்க வேண்டும் என்று 7-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் டாக்டர் கே.கார்த்திக் மாநகராட்சி மற்றும் மண்டல குழு கூட்டத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து நேற்று காலை சென்னை மாநகராட்சி உதவி பொறியாளர் ராஜாராம் தலைமையிலான அதிகாரிகள் பாலகிருஷ்ண நகர் பகுதிக்கு வந்தனர். பின்னர் முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன், கவுன்சிலர் கார்த்திக் ஆகியோர் முன்னிலையில் சாலையை ஆக்கிமிரத்து தனியார் கட்டுமான நிறுவனத்தின் சார்பில் கட்டி இருந்த சுமார் 250 மீட்டர் நீளமுள்ள சுற்றுசுவரை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து தள்ளினர். மீட்கப்பட்ட இடத்தில் உடனடியாக சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் அதிகாரிகளுக்கு கவுன்சிலர் கோரிக்கை விடுத்தார்.


Next Story