விழுப்புரத்தில்மக்கள் நலப்பணியாளர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்


விழுப்புரத்தில்மக்கள் நலப்பணியாளர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 July 2023 12:15 AM IST (Updated: 5 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் மக்கள் நலப்பணியாளர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர் சங்கம் சார்பில் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியத்தில் பணி வழங்கக்கோரியும், இறந்தவர்களின் வாரிசுக்கு தேர்தல் வாக்குறுதிப்படி பணி ஆணையும், ரூ.5 லட்சம் நிவாரணமும், பணி ஓய்வுபெற்ற பணியாளர்களின் குடும்பத்திற்கு வாரிசு வேலை வழங்க வலியுறுத்தியும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கந்தவேல் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் ஜெயகாந்தன் முன்னிலை வகித்தார்.

இதில் ஒன்றிய நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், வெங்கடேசன், ஆறுமுகம், குமார், சுப்பிரமணி, முனியம்மாள், வேலாயுதம், செந்தாமரைக்கண்ணன் உள்பட பலர் கருப்பு பட்டை அணிந்தவாறு கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பின்னர் ஆர்ப்பாட்டம் முடிந்ததும் அவர்கள் அனைவரும், மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.


Next Story