ராசிபுரத்தில்இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


ராசிபுரத்தில்இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
நாமக்கல்

ராசிபுரம்

மணிப்பூர் மாநிலத்தில் தொடரும் கலவரத்தையும், படுகொலை, தீ வைப்பு சம்பவத்தையும் தடுக்காத மத்திய அரசை கண்டித்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க கோரியும் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் ஆயுத குழுக்களிடமிருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்யவும் மத்திய அரசை வலியுறுத்தி ராசிபுரம் பழைய பஸ் நிலையம் அருகில் ராசிபுரம் ஒன்றிய நகர குழு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் கார்த்திகேயன் கண்டன உரையாற்றினார். இந்திய மாதர் தேசிய சம்மேளன மாநில துணைச் செயலாளர் லலிதா, மாவட்ட செயலாளர் மீனா, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் கிருஷ்ணசாமி, குமாரபாளையம் நகர செயலாளர் கணேசன் குமார், வெண்ணந்தூர் ஒன்றிய செயலாளர் செங்கோட்டுவேல், ராசிபுரம் ஒன்றிய பொறுப்பாளர் வக்கீல் ராஜா, திராவிடர் விடுதலைக் கழகம் நகரச் செயலாளர் பிடல் சேகுவாரா, நகர குழு உறுப்பினர் ராஜா, துணைச்செயலாளர் சாதிக், வெண்ணந்தூர் ஒன்றிய குழு மாதேஸ்வரி, இளைஞர் பெருமன்ற தாலுகா தலைவர் வேம்பு உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். முடிவில் நகரப் பொருளாளர் சலீம் நன்றி கூறினார்.


Next Story