நாமக்கல்லில்ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


நாமக்கல்லில்ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
நாமக்கல்

ஒவ்வொரு மாதமும் முதல் தேதி அன்று ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பழனியப்பன் தலைமை தாங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது சமூகநலத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டமைப்பு கூட்டத்தில் ஒப்பு கொண்டபடி மருத்துவ காப்பீடு, ஈமக்கிரியை செலவு நிதியாக ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிப்படி முறையான சிறப்பு ஓய்வூதியம் ரூ.7,500 மற்றும் அகவிலைப்படியுடன் குடும்ப பென்ஷன் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜெயப்பிரகாசம், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் தங்கராசு, சங்கத்தின் மாவட்ட பொருளாளர் செல்வாம்பாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story