தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்புஅரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்புஅரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தர்மபுரி

தர்மபுரி

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சேகர், மாவட்ட பொருளாளர் இளவேனில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் சங்கர், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில செயலாளர் மகேஸ்வரி, கருவூல கணக்கு துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் சின்னசாமி, தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் மாவட்ட செயலாளர் வெங்கடேசன், பேரூராட்சி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பெருமாள் உள்பட பல்வேறு அரசு ஊழியர் சங்கங்களின் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்கள். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசுத்துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். தேர்தல் காலத்தில் முதல்- அமைச்சர் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story