ஆர்ப்பாட்டம்
போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கடலூர்
போக்குவரத்து கழகங்களின் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாச தொகையை வழங்கிட வேண்டும். பிற துறை ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். 1.4.2003-க்கு பிறகு பணியில் சேர்ந்த அனைவருக்கும் பழைய ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்காக கடலூர் இம்பிரீயல் சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி அருகில் இருந்து போக்குவரத்து கழக பணிமனைக்கு பேரணியாக சென்றனர்.
தொடர்ந்து போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் பணிமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். சிறப்பு தலைவர் பாஸ்கரன், பொதுச்செயலாளர் முருகன், துணை பொதுச் செயலாளர்கள் கண்ணன், ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பொருளாளர் அருண் பாலன் மற்றும் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.