ஆர்ப்பாட்டம்
பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருநெல்வேலி
பேட்டை:
இந்திய கம்யூனிஸ்டு மார்க்சிஸ்ட்-லெனினிஸ்டு கட்சியின் சார்பாக மணிப்பூர் மாநில சம்பவத்தை கண்டித்தும், பா.ஜ.க. அரசு பதவி விலக வலியுறுத்தியும் பேட்டை மல்லிமால் தெருவில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் அன்புச்செல்வி தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் செய்யதலி பாத்திமா முன்னிலை வகித்தார். கட்சியின் மாநில நிலைக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ரமேஷ், நெல்லை மாவட்டச் செயலாளர் சுந்தர்ராஜ் கண்டன உரையாற்றினர். மேலும் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர்கள் கணேசன், கருப்பசாமி, ரவிடேனியல், மாரிமுத்து, சுப்பிரமணியன் மற்றும் செல்வகணபதி, ராமையா, சபாபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.
Related Tags :
Next Story