சேலத்தில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சேலத்தில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம்
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க மாநில தலைவர் விசுவநாதன் தலைமை தாங்கினார். சேலம் மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பிள்ளை முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சரபங்கா திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும். அனைத்து ஏரிகளையும் தூர்வார வேண்டும். காவிரி நீரை சேர்த்து வைக்க வேண்டும். ஒரு குவிண்டால் மக்காச்சோளத்திற்கு ரூ.3 ஆயிரம், ஒரு டன் மரவள்ளிக்கிழங்கிற்கு ரூ.20 ஆயிரம், நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. முடிவில் தலைவாசல் ஒன்றிய பொறுப்பாளர் பழனிவேல் நன்றி கூறினார்.
Next Story