மத்திய அரசை கண்டித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்


மத்திய அரசை கண்டித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Aug 2023 1:00 AM IST (Updated: 22 Aug 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

மத்திய அரசின் இந்தி திணிப்பு சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட வக்கீல் சங்க தலைவர் கோவிந்தராஜீலு, செயலாளர் சத்தியநாராயணன், துணைத் தலைவர் ராமச்சந்திரன், சுரேகா, இணைசெயலாளர் மணிகண்டன், நூலகர் கலையரசன் மற்றும் சங்க உறுப்பினர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story