ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பாக எஸ்.புதூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எஸ்.புதூர்,
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு எஸ்.புதூர் கிளையின் சார்பாக எஸ்.புதூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பாக தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டார தலைவர் பிராங்ளின் தலைமை தாங்கினார். செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார். தொடக்கக்கல்வி மாணவர்களின் கல்வி தரத்தை பாதிக்கும் எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிடுதல், ஆன்லைன் தேர்வுகளை கைவிடுதல், காலை உணவு திட்டத்தில் ஆசிரியர்களை பயன்படுத்துவதை தடுத்து, சத்துணவு ஊழியர்களை நியமனம் செய்தல், காலை உணவு திட்டத்தை 6,7,8-ம் வகுப்பு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவுபடுத்துதல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எஸ்.புதூர் ஒன்றிய ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார துணை தலைவர் ஜீவபிரபு நன்றி கூறினார்.