காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரிசேலத்தில் கால்நடை ஆய்வாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி சேலத்தில் கால்நடை ஆய்வாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்
சேலம்
தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கம் சார்பில் கால்நடைத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொருளாளர் கதிரவன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சுரேஷ், ஓய்வு பெற்ற கால்நடை ஆய்வாளர் சங்க மாநில செயலாளர் தேவராஜன் மற்றும் கால்நடை ஆய்வாளர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கால்நடை முதுநிலை மருத்துவ மேற்பார்வையாளர்களுக்கு அடுத்தக்கட்ட பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story