கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

சேலத்தில் கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சேலம்

சேலம்:

இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மோகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சண்முகராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 44-வது வார்டு கவுன்சிலர் இமயவரம்பன், மாவட்ட பொருளாளர் காஜா மொய்தீன் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் மீதான வரிகளை கைவிட்டு, விலை உயர்வுகளை திரும்ப பெற வேண்டும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும், பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் ரேஷன் கடைகளில் வழங்க வேண்டும், அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

1 More update

Next Story