அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்


அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்
x

ஓசூரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர் எம்.ஜி.ரோடில் உள்ள காந்தி சிலையருகே அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு யோகி நாராயணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆதில், டேனியல் ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் லகுமய்யா, ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில செயலாளர் பாரதி மற்றும் மாதையன் உள்பட பலர் பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு பணியிடங்களில் தமிழக இளைஞர்களுக்கு 90 சதவீதம் வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். வேலையில்லா காலத்தில் இளைஞர்களுக்கு ரூ.15 ஆயிரம் வாழ்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story