ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

கோவில்பட்டியில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பொறுப்பாளர் தினேஷ்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ரெயில் நிலையம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சுரேஷ், இந்திய கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட துணைத்தலைவர் தெய்வேந்திரன், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகள் சங்க மாநில செயலாளர் முத்து காந்தாரி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட தலைவர் விஜயலட்சுமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story