பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x

தூத்துக்குடியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடந்தது

தூத்துக்குடி

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் தூத்துக்குடி தபால் தந்தி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் செய்யது அப்துல் கரீம் தலைமை தாங்கினார். எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட செயலாளர் சம்சுதீன் முன்னிலை வகித்தார். ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, சந்தனராஜ், பால்.பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் அமலாக்கத்துறை முடக்கம் செய்து உள்ள வங்கி கணக்குகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மாநகர செயலாளர் அப்துல் காலிப் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story