அண்ணா தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஆத்தூரில் அண்ணா தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்; ஆர்.இளங்கோவன் பங்கேற்பு
சேலம்
ஆத்தூர்:
போக்குவரத்து தொழிலாளர்களின் 14-வது ஊதிய ஒப்பந்தத்தில் 5 சதவீதம் குறைத்து வழங்கிய திமுக அரசை கண்டித்து சேலம் மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்கம் சார்பில் ஆத்தூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சேலம் மண்டல செயலாளர் சென்னகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோவன் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் ஜெய்சங்கரன், நல்லதம்பி, சித்ரா, ஒன்றிய செயலாளர்கள் சேகர், ரஞ்சித்குமார், முருகேசன், நகர செயலாளர்கள் மோகன், மணிவண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆத்தூர் அண்ணா போக்குவரத்து கழக பணிமனை தலைவர் குமார் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story