கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

நாமக்கல்லில் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

நாமக்கல்

நாமக்கல்:

ஆர்ப்பாட்டம்

நாமக்கல் மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க மாவட்ட தலைவர் ரங்கசாமி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் நாகராஜன், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் வேலுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச்செயலாளர் சிவக்குமார் ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார்.

தொடர்ந்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் விற்பனையாளர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள அகவிலைப்படியை உயர்த்த கோரியும், தேர்வுநிலை மற்றும் சிறப்புநிலை ஊதிய உயர்வு கேட்டும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பணி பாதுகாப்பு

மேலும் நகை மதிப்பீட்டாளர் மற்றும் கணினியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், பொதுமுடக்க காலத்தில் பணிபுரிந்தவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும், பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்பட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கமிட்டனர்.

அதேபோல் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கும் மருத்துவ சலுகை வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். முடிவில் நிர்வாகக்குழு உறுப்பினர் ஆனந்தன் நன்றி கூறினார்.


Next Story