ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x

காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தென்காசி

சிவகிரி:

சிவகிரி பஸ் நிலையம் அருகே காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். காங்கிரஸ் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல்காந்தி மீது உள்நோக்கத்தோடு நடவடிக்கை எடுப்பதாகவும், அமைதியாக போராடிய காங்கிரஸ் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

தென்காசி மாவட்ட காங்கிரஸ் ஓ.பி.சி. தலைவர் என்.திருஞானம் தலைமை தாங்கினார். மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் கணேசன், சிவகிரி நகர காங்கிரஸ் தலைவர் சண்முகசுந்தரம், தொகுதி ஓ.பி.சி. தலைவர் காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர ஓ.பி.சி. தலைவர் மாரியப்பன் நன்றி கூறினார்.


Next Story