ஸ்ரீமுஷ்ணத்தில் ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
ஸ்ரீமுஷ்ணத்தில் ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூர்
ஸ்ரீமுஷ்ணம்,
தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஸ்ரீமுஷ்ணம் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்ரீமுஷ்ணத்தில் வட்டார கல்வி அலுவலகம் மற்றும் ஒருங்கிணைந்த கல்வி வட்டார வள மையம் ஆகியவற்றை உடனடியாக அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் அருள்மொழி தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் ராமநாதன், கலைச்செல்வன், மகாலட்சுமி, துணை செயலாளர்கள் ஜவகர் நாராயணசாமி, குளோரியா அஞ்சலா மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார செயலாளர் குமரவேல் வரவேற்றார்.
இதில் கல்வி மாவட்ட செயலாளர் குருராஜன், முன்னாள் வட்டார தலைவர்கள் ரவிசுந்தர், உமாதேவி, முன்னாள் மாவட்ட துணைத்தலைவர்கள் விஜயலட்சுமி, ரூபி ரோஸ்லின், மாவட்ட செயலாளர் சிற்றரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story