ஆற்காடு லுத்தரன் திருச்சபையினர் ஆர்ப்பாட்டம்
ஆற்காடு லுத்தரன் திருச்சபையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூர்
தலித் கிறிஸ்தவர்களை பட்டியல் இனத்தில் மத்திய அரசு சேர்க்க வலியுறுத்தி கடலூர் மஞ்சக்குப்பம் கார் நிறுத்தம் அருகில் ஆற்காடு லுத்தரன் திருச்சபையினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு திருச்சபை பேராயர் சாமுவேல் கென்னடி தலைமை தாங்கினார். தி.மு.க. மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் இள.புகழேந்தி, மாநகர செயலாளர் ராஜா, கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் அகஸ்டின் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இதில் மண்டல ஆயர்கள் செல்வராஜ், ராபர்ட், கருணைக்கண்ணன், ஷர்வின், செல்வக்குமார், ராபர்ட், ஜெயபால், டால்டன், ஜோசப் அருள்ராஜா மற்றும் தலித் கரிசனைத்துறையினர் கலந்து கொண்டனர். முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Related Tags :
Next Story