இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஜலகண்டாபுரம் பஸ் நிலையத்தில் நங்கவள்ளி ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம்
ஜலகண்டாபுரம் பஸ் நிலையத்தில் நங்கவள்ளி ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் பழ.ஜீவானந்தம் தலைமை தாங்கினார். இதில் எடப்பாடி, ஜலகண்டாபுரம் பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனைகளில் தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். தவறான அறுவை சிகிச்சை செய்த டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் மோகன், ஒன்றிய துணை செயலாளர் கிருஷ்ணன், நகர செயலாளர் கோகுல கிருஷ்ணன், ஒன்றிய பொருளாளர் அருணாச்சலம், மாவட்ட குழு உறுப்பினர்கள் சதீஷ்ராஜா, வசந்தா உள்பட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story