ஆர்ப்பாட்டம்
பா.ஜனதா கண்டன ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி
பணகுடி:
பணகுடி சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டில் வாறுகால் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. வாறுகால் அமைப்பதில் முறைகேடு நடந்து இருப்பதாக பா.ஜனதாவினர் பேரூராட்சி செயல் அலுவலரிடம் புகார் மனு அளித்துள்ளனர். அதற்கு நடவடிக்கை எடுக்காததை கண்டித்து நேற்று பா.ஜனதாவினர் பஸ்நிலையம் முன்பு மாவட்ட பா.ஜனதா தலைவர் தயாசங்கர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் எதிர்ப்பு கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினர். பின்னர் அனுமதியின்றி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பா.ஜனதாவினரை பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அஜீகுமார் தலைமையில் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினார்கள்.
Related Tags :
Next Story