ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x

தமிழ் பேரரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு தமிழ் பேரரசு கட்சி மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மாநில வழக்கறிஞர் அணி சரவணன், மாவட்ட பொருளாளர் குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் இசக்கிமுத்து, நகர செயலாளர் அங்குராஜ், நகர மாணவரணி செயலாளர் குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து அலுவலக கண்காணிப்பாளர் இன்ப குமாரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கோவில்பட்டி நகரில் மக்களை அச்சுறுத்தும் வகையில் பஸ்களில் ஏர்ஹாரன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏர்ஹாரன்களை பறிமுதல் செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.


Next Story