அஞ்சல் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


திருச்செங்கோட்டில் அஞ்சல் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல்

எலச்சிபாளையம்

மத்திய அரசு அஞ்சல் துறை ஊழியர்களுக்கு போனஸ் வழங்காமல் இழுத்தடித்து வருவதை கண்டித்து திருச்செங்கோடு தலைமை தபால் நிலையம் முன்பு அஞ்சல் துறை சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எழுத்தர் சங்க கிளை தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். இதில் எழுத்தர் சங்க கிளை செயலாளர் ஜெகதீஸ்வரன், தபால்காரர்கள் சங்க கிளைத்தலைவர் மாது, கிராமப்புற அஞ்சல் ஊழியர் சங்க பொருளாளர் குப்புசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு வழக்கம்போல் தசரா பண்டிகைக்கு முன்பாக அஞ்சல் துறை ஊழியர்களுக்கு போனஸ் கொடுப்பது நடைமுறை. ஆனால் இந்தாண்டு அஞ்சல் துறை ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய போனசை இது வரை கொடுக்காமல் இழுத்தடிக்கும் அஞ்சல் நிர்வாகத்தையும், மத்திய அரசையும் கண்டித்தும், உடனடியாக போனசை வழங்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் உதயகுமார் நன்றிகூறினார்.


Next Story