ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேர்தல் அறிக்கையில் கூறியபடி பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டை களைந்து மத்தியஅரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார். இதில் தேசிய கல்வி கொள்கையை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். அரசு பள்ளிகளில் படித்து தற்போது கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு வழங்கப்படும் ரூ.1,000 உதவித்தொகையை உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் வழங்க வேண்டும். 50 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்பட்ட உயர்கல்விக்கான ஊக்க ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.