ஓசூரில் பா.ஜனதா விவசாய அணியினர் ஆர்ப்பாட்டம்
ஓசூரில் பா.ஜனதா விவசாய அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கிருஷ்ணகிரி
ஓசூர்:
தமிழக தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, ரேஷன் கடைகளில் விலையில்லா தேங்காய்களை தமிழக மக்களுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில் ஓசூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஓசூர் ராம்நகர் அண்ணா சிலையருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட விவசாய அணி தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். மாநில செய்தி தொடர்பாளரும், முன்னாள் எம்.பி.யுமான சி.நரசிம்மன், மாவட்ட பா.ஜனதா தலைவர் எம்.நாகராஜ், மாநில விவசாய அணி துணைத்தலைவர் கோவிந்த ரெட்டி ஆகியோர் ேகாரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில், மாவட்ட பொருளாளர் சீனிவாசன், பொதுச்செயலாளர்கள் பி.எல்.மனோகர், அன்பரசன், மாவட்ட செயலாளர்கள் பிரவீன் குமார், பார்த்திபன் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story