விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

வள்ளியூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

திருநெல்வேலி

வள்ளியூர் (தெற்கு):

வள்ளியூர் பழைய பஸ் நிலையம் காமராஜர் சிலை அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் அசுத்தம் செய்ததை கண்டித்தும், அவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர், நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ் தலைமை தாங்கினர். நாங்குநேரி சட்டமன்ற தொகுதி செயலாளர் ஈழவளவன் முன்னிலை வகித்தார். வள்ளியூர் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் வரவேற்று பேசினார். மாநில துணை பொது செயலாளர் ஆற்றலரசு கண்டன உரையாற்றினார். அப்பாசாமி, அரசு பிரபாகரன், திருமா பிரகாசு, முத்து வளவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story