ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x

மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரியலூர்

குஜராத் கலவரம் தொடர்பான சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை பி.பி.சி. நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. அந்த ஆவணப்படத்தை இந்தியா மோடிக்கான கேள்விகள் என்ற தலைப்பில் திரையிட இந்திய மாணவர் சங்கத்தினர் முடிவு செய்திருந்தனர். ஆனால் அந்த ஆவணப்படத்தை திரையிட போலீசார் அனுமதி மறுத்து தடை விதித்திருந்தனர். இந்த நிலையில் ஆவணப்படத்தை திரையிட தடை விதித்ததை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் அச்சங்கத்தை சேர்ந்தவர்கள் நேற்று மதியம் காந்தி சிலை முன்பு திடீரென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story