இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

பள்ளிபாளையம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல்

பள்ளிபாளையம்

பள்ளிபாளையம் வசந்த நகர் பஸ் நிறுத்த பகுதி அருகே பள்ளிபாளையம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஒன்றிய குழு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் எம்.லட்சுமணன் தலைமை தாங்கினார். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில், பொதுமக்கள் குடிக்கும் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டியில், மனித கழிவுகள் கலந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், இந்த தீண்டாமை கொடுமைக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்திய, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தோழர்களை போலீசார் கைது செய்ததை கண்டித்தும், மனித கழிவு கலந்த குடிநீர் நீர்த்தேக்க தொட்டியை உடனடியாக இடித்துவிட்டு, ஊர்பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில், புதிய குடிநீர் நீர்த்தேக்க தொட்டியை அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மணிகண்டன், பள்ளிபாளையம் ஒன்றிய செயலாளர் எம்.நவீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கவுசல்யா, வாலிப சங்க ஒன்றிய துணைத் தலைவர் ரவி, ஒன்றிய குழு உறுப்பினர்கள், வாலிபர் சங்க முன்னாள் நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story