மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு  ஆர்ப்பாட்டம்
x

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்

முதுகுளத்தூர் பஸ் நிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாலுகா செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் காசிநாதன், வழக்கறிஞர் பிரிவு மாநில குழு உறுப்பினர் வழக்கறிஞர் சந்திரசேகர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலையரசன், மயில்வாகனன், முத்துராமு, கண்ணகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுக்கோட்டையில் நடைபெற உள்ள மாநாட்டிற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சிலர் உண்டியல் வசூல் செய்தபோது அப்போது வெண்கல குறிச்சி கிராமத்தை சேர்ந்த செந்தூர் பாண்டியன் மற்றும் புளியங்குடி கிராமத்தை சேர்ந்த போஸ் முத்துச்சாமி ஆகியோருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த கணேசன், அங்குதான், ராஜேந்திரன், முருகேசன் ஆகியோர் தாக்கப்பட்டனர். இதில் கணேசன், அங்குதான் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து இரு தரப்பினர் முதுகுளத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தநிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரை தாக்கிய நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் வாவா ராவுத்தர், இந்திய கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் ஜெயசீலன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் உறுப்பினர்கள் முனியசாமி, குருசாமி, சண்முகையா, அரியராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story