காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர் அருகே கீழச்சிவல்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அருகே கீழச்சிவல்பட்டியில் மத்தியஅரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் எஸ்.எம்.பழனியப்பன், பொதுக்குழு உறுப்பினர் ஜெயசிம்மன், மாவட்ட செயலாளர் செல்வமணி, வட்டார காங்கிரஸ் தலைவர் பிரசாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராகுல்காந்தியின் எம்.பி. பதவி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதில், இளைஞர் காங்கிரஸ் செயலாளர் சீனிவாசன், மாவட்ட இணை செயலாளர் மருதுபாண்டி, திருப்பத்தூர் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சேதுமெய்யப்பன், எஸ்.புதூர் வட்டார தலைவர் தேனன், வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன், தங்கராஜ், பழனிவேல்ராஜன், அழகப்பன், அன்னலெட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக நகர் தலைவர் அழகுமணிகண்டன் வரவேற்றார். முடிவில் வட்டார தலைவர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.