ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x

ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

ஆலங்குடியில் இந்திய ஐக்கிய விவசாயிகள் தொழிலாளர்கள் சங்கம், கடைமடை பாசன கிராம விவசாயிகள், பொதுமக்கள் சார்பில் ஆலங்குடி தாலுகா அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை மாவட்ட துணை செயலாளர் சொர்ணகுமார் தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் ஆர்ப்பாட்ட கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் வேலன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் வாய்க்கால்கள், கடைமடைகளை செப்பனிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பின்னர் ஆலங்குடி வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.


Next Story